

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ராணுவ அணிவகுப்பு நடத்துவது சீனாவின் வழக்கம். இம்முறை சீன தலைநகர் பீஜிங்கில் இரண்டாவது உலகப்போரில் வெற்றியடைந்ததன் 70வது ஆண்டு நினைவாக இந்த ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது சீனாவில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்புக் கழகத்தின் தலைமை அதிகாரி ஃபூ சென்குவா சீன இணையதள செய்தி மையத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர்நினைவு நிகழ்ச்சிக்கு ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றும் சீன ராணுவ அணிவகுப்பை வெளிநாட்டுத் தலைவர்கள் பார்வையிடுவது இதுவே முதன்முறை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் குடியரசு 1949ல் உதயமானதைத் தொடர்ந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ராணுவ அணிவகுப்பை நடத்தி வருவதை சீனா வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2009ல் ராணுவ அணிவகுப்பை நடத்தியது.