

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான பேரணியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, நிர்வாக அலட்சியம், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் பாகுபாடு மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராக, கடந்த மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்குமாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறது. இப்போராட்டங்களை ஒடுக்க ஆயுதம் ஏந்திய கூடுதல் படைகளை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது.