அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 30 இந்​தி​யர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்​புத் துறை (சிபிபி) சமீபத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கலி​போர்​னி​யா​வின் எல் சென்ட்ரோ செக்​டாரில் உள்ள எல்லை ரோந்​துப் படை​யினர், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சோதனை​யின்​போது சட்​ட​விரோத​மாகக் குடியேறியதுடன் வணிக ரீதி​யான ஓட்​டுநர் உரிமம் வைத்​துக் கொண்டு லாரி ஓட்டி வந்த 49 பேரை கைது செய்​துள்​ளனர். இதில் 30 பேர் இந்​தி​யர்​கள் ஆவர். மற்​றவர்​கள் எல் சல்​வ​டார், சீனா, எரித்​ரி​யா, ஹைதி, ஹோண்​டு​ராஸ், மெக்​சிகோ, ரஷ்​யா, சோமாலி​யா, துருக்கி மற்​றும் உக்​ரைன் ஆகிய நாடு​களைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

31 பேர் வைத்​திருந்த உரிமங்​கள் கலி​போர்​னி​யா​வில் வழங்​கப்​பட்​டுள்​ளன. மற்ற உரிமங்​கள் புளோரி​டா, இல்​லி​னாய்​ஸ், இண்​டி​யா​னா, ஓஹியோ, மேரிலேண்ட், மின்​னசோட்​டா, நியூஜெர்​சி, நியூ​யார்க், பென்​சில்​வேனியா மற்​றும் வாஷிங்​டனில் வழங்​கப்​பட்​டுள்​ளன. இது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல்: அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in