Last Updated : 22 Jan, 2015 11:15 AM

 

Published : 22 Jan 2015 11:15 AM
Last Updated : 22 Jan 2015 11:15 AM

இஸ்ரேலில் தீவிரவாதத் தாக்குதல்: ஓடும் பஸ்ஸில் 9 பேருக்கு கத்திக் குத்து

இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரத்தில் ஓடும் பஸ்ஸில் 9 பயணிகளுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. தனி ஒரு நபர் மேற்கொண்ட இந்தத் தாக்குதல் தீவிரவாதத் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

டெல் அவிவ் நகரத்தில் நேற்று மெனாசெம் பெகின் எனும் சாலையில் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அதில் பயணித்த அரபு நாட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர், திடீரென்று பேருந்தில் இருந்த பயணிகளை கத்தி கொண்டு தாக்கத் தொடங்கினார்.

இந்தத் தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் உட்பட‌ 9 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. அதில் இருவர் படுகாயம் அடைந்தனர். பயணிகளைத் தாக்கிவிட்டு, பேருந்தில் இருந்து குதித்துத் தப்பி ஓடியவரை, போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், முறையான விசா இல்லாமல் இஸ்ரேலில் தங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலை தீவிரவாதத் தாக்குதலாக போலீஸார் கருதும் நிலையில், இதை `வீரச் செயல்' என்று காஸா எல்லையை தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு பாராட்டியுள்ளது.

மேலும், "பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலுக்கு இது சரியான பதிலடி" என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக் கும் இடையே நடந்த போர் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இஸ்ரேலியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாலஸ்தீனியர்கள் பலர் இது போன்ற தனி நபர் தாக்குதல்களில் இறங்கியுள்ளனர். அவர்கள் துப் பாக்கி, வெடிகுண்டுகளுக்குப் பதிலாக கத்தி, இறைச்சி வெட்ட பயன் படுத்தும் அரிவாள் போன்ற வற்றைக் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x