மென்று தின்னாததால் மரணம்: புத்தாண்டின்போது ஜப்பானில் சோகம்

மென்று தின்னாததால் மரணம்: புத்தாண்டின்போது ஜப்பானில் சோகம்
Updated on
1 min read

ஜப்பான் நாட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவை மென்று தின்னாமல் அவசர அவசரமாக விழுங்கியதால் அங்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் புத்தாண்டு விடுமுறை நாளில் 'மோச்சி' எனும் பாரம்பரிய உணவை ஜப்பானியர்கள் சமைப்பது வழக்கம். இனிப்பு அவரை சேர்த்து காய்கறி சூப்பில் சமைக்கப்படும் இந்த உணவு பார்ப்பதற்கு கொழுக்கட்டை போன்று இருக்கும். ஒட்டும் தன்மையுள்ள இந்த உணவை நிதானமாக மென்று தின்னாமல் கொண்டாட்டப் பரபரப்பில் வேக வேகமாக விழுங்கியதால் சிலரின் தொண்டைப் பகுதிகளில் ஒட்டிக்கொண்டது. இதனால் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மரணமும் நிகழ்ந்தது. இவ்வாறு புத்தாண்டு தினத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாட்களில் 128 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3ஆண்கள் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in