

கனடாவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், 2 குழந் தைகள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தற் கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணம், எட்மான்ட்டன் நகரில் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட அந்நபர் முதலில் ஒரு பெண்ணையும் பிறகு நகரின் மற்றொரு பகுதியில், ஒரு வீட்டுக்குள் புகுந்து, 3 பெண்கள், 2 ஆண்கள், ஒரு சிறுவன், ஒரு சிறுமி என 7 பேரையும் சுட்டுக்கொன்றார். பின்னர் புறநகர் பகுதியில் உள்ள உணவகத்துக்குச் சென்ற அவர் அங்கு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கினர். கொலையாளி மற்றும் இறந் தவர்களின் பெயர்கள், வயது போன்ற விவரங்களை போலீஸார் இதுவரை வெளியிட வில்லை.
இந்தப் படுகொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் கூறினர்.
எட்மான்ட்டனர் நகரில் 1956-ல் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத் துக்குப் பின் நிகழ்ந்த மிகுந்த துயரமான சம்பவம் இது வென்று போலீஸார் மேலும் கூறினர்.