

இலங்கையில் தமிழர்களுக்கு சம அரசியல் உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளிடையே கருத் தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையின் தெனியாய பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியது: 13-வது சட்ட திருத்தத்துக்கு உட்பட்டு இலங்கையில் இனப் பிரச்சி னைக்கு தீர்வுகாண அனைத் துக் கட்சிகளிடையே கருத் தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்கிற கட்டமைப்புக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க முடியும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. அனைத்து மாகாண கவுன்சில்களுக்கும் சம அதிகாரம் வழங்கப்படும்.
பிரச்சினைகளை ராஜபக்ச தவறாக கையாண்டதன் விளை வாகத்தான் ஐ.நா. மனித உரிமை கமிஷனின் விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது என்றார்.