Published : 14 Jan 2015 01:11 PM
Last Updated : 14 Jan 2015 01:11 PM

ராஜபக்ச தோல்விக்குப் பின் இரவோடு இரவாக குடிபெயர்ந்த ஜோதிடர்

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்விக்குப் பிறகு, அவரது ஜோதிடர் மூட்டை முடிச்சுகளுடன் இரவோடு இரவாக நகரின் மற்றொரு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார்.

சுமனதாசா அபேகுணவர்தனா (63) என்ற இந்த ஜோதிடர், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியவர் ஆவார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மைத்ரி பால சிறிசேனாவிடம் ராஜபக்ச தோல்வியடைந்த பிறகு, அபே குணவர்தனா செய்தியாளர்களை தவிர்த்து வருகிறார்.

ராஜபக்ச, அதிகாரக் குவிப்புடன் கூடிய தனது ஆட்சிக் காலத்தில் ஜோதிடர் அபேகுணவர்தனாவை மிகவும் சார்ந்திருந்தார். அதிபர் தேர்தலை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தும் முடிவை கூட இவரை கலந்து ஆலோசித்த பிறகே எடுத்தார்.

வாக்குப் பதிவு நாளில்கூட ராஜபக்ச தனது தோல்வியை உணராமல் மிகப்பெரிய வெற்றி பெறுவேன் என்றார்.

ராஜபக்சவால் எங்கள் குரு என்ற அழைக்கப்பட்ட அபே குணவர்தனா, கடந்த 32 ஆண்டு களாக அவருக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். இவருக்கு பரிசுப் பொருள்களை தாராளமாக வழங்கி வந்தார் ராஜபக்ச.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் ராஜபக்சவுடன், அபேகுணவரத்னாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

அபேகுணவர்தனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “நான் யாரையும் இப்போது சந்திப்ப தில்லை. குறிப்பாக ஊடகங் களை தவிர்த்து வருகிறேன். எனக்கு மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் என்னை கைவிடமாட் டார்கள்” என்றார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை ராஜபக்சவின் தோல்வி உறுதியான பிறகு அபேகுணவர்தனா அவரிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அபேகுண வர்தனா உடனடியாக தனது வீட்டையும் காலிசெய்துவிட்டு நகரின் மற்றொரு பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x