Published : 07 Jan 2015 08:55 AM
Last Updated : 07 Jan 2015 08:55 AM

பெஷாவரை விட மோசமான தாக்குதல் நடத்துவோம்: முல்லா பஸுல்லா தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

பெஷாவர் ராணுவப் பள்ளியில் நடத்தப்பட்டதை விட மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி பெஷாவர் ராணுவப் பள்ளியில், தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 140-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள்.

இந்நிலையில், பெஷாவர் தாக்குதலை விட மிகத் தீவிரமான தாக்குதலை நடத்துவோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தெஹ்ரிக் இ தலிபான்கள் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 12 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், டிடிபி தலைவர் முல்லா பஸுல்லா பஷ்டூ மொழியில் பேசியுள்ளார். அவரின் அருகில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் முகத்தை துணியால் மறைத்தபடி நின்றுகொண்டுள்ளனர்.

அதில் முல்லா பஸுல்லா பேசியிருப்பதாவது: மாணவர் களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து, சிறையில் இருக்கும் எங்கள் இயக்கத்தினரை விடுவிப்பதுதான் எங்கள் முதல் நோக்கமாக இருந்தது. ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் சூழ்நிலை மாறி விட்டது. மூத்த மாணவர்களைச் சுட்டுக் கொன்றோம். அவர்கள் ராணுவ வீரர்களின் குழந்தைகள். நாளை ராணுவத்தில் இணைந்து எங்களை எதிர்ப்பார்கள்.

சிறையில் இருக்கும் எங்கள் இயக்கத்தவரை சித்ரவதை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அரசை எச்சரிக்கிறேன். இல்லாவிட்டால் பெஷாவரை மறக்கச் செய்யும் அளவுக்கு வேறு தாக்குதல்கள் நடக்கும். இது ராணுவத்துக்கும் எங்களுக்கும் இடையேயான போர். நீங்கள் எங்கள் ஆட்களைக் கொல்லுங்கள், நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறோம்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இயக்கத்துக்கு கூடுதல் ஆட் களைச் சேர்க்கவும், ராக்கெட் தாக்கு தல்களுக்கு தயாராகும்படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் முல்லா பஸுல்லா கொல்லப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், தற்போதைய வீடியோ மூலம் முல்லா பஸுல்லா உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளது.

பஸுல்லா தலைக்கு பரிசு

தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கைபர் பக்துன்க்வா அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண செய்தித் துறை அமைச்சர் முஷ்டாக் கானி கூறும்போது, “மொத்தம் 615 தீவிரவாதிகளைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களைத் தருபவர்களுக்கு ரூ.76 கோடி பரிசு வழங்கப்படும். தெஹ்ரிக் இ தலிபான் தலைவர் முல்லா பஸுல்லா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x