Last Updated : 07 Jan, 2015 04:58 PM

 

Published : 07 Jan 2015 04:58 PM
Last Updated : 07 Jan 2015 04:58 PM

செல்ஃபி எடுப்பது எப்படி?- தனி கோர்ஸ் நடத்தும் லண்டன் கல்லூரி

லண்டன் கல்லூரி ஒன்று தனது மாணவர்களுக்கென செல்ஃபி எடுப்பதற்காகவே தனியாக ஒரு கோர்ஸை ஆரம்பிக்க இருக்கிறது.

லண்டனில் உள்ள சிட்டி லிட் என்னும் கல்லூரி, புதிதாகத் தொடங்கப்போகும் ஒரு கோர்ஸ் மூலம், மாணவர்களை ”செல்ஃபி எடுக்க முழுமையாகக் கற்றுக்கொண்டவர்கள்” என்று மாற்றப்போவதாகக் கூறியுள்ளது.

உலகிலேயே முதன் முதலில் செல்ஃபி எடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கோர்ஸ் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது.

"சுய உருவ ஓவியத்தின் புகைப்படக் கலை (“The art of photographic self-portraiture,”) என அழைக்கப்படும் இந்தக் கோர்ஸைப் படிக்க 132 டாலர்கள் கட்டணம்.

வளர்ந்து வரும் புகைப்பட கலைஞர்களுக்கு, செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கத் தோதான இடம், சூழ்நிலை, வெளிச்சம், சுற்றுப்புறம் போன்ற விஷயங்களும், அவர்களின் வேலை தொடர்பான குறிப்பிடத்தக்க விளக்கங்களும் கற்றுத் தரப்படுமாம்.

இது தவிர்த்து, சிறந்த புகைப்படம் எடுப்பதற்கான புதுப்புது ஆலோசனைகளும் வழங்கப்படும் எனவும் லண்டன் கல்லூரி தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x