

தமது நாட்டில் நிலவும் கடும் பெட்ரோல் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக டாவோஸ் நகருக்கான தனது பயணத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரத்து செய்தார். டாவோஸில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடக்கிறது.இதில் கலந்துகொள்ள நவாஸ் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் உள்நாட்டில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாட்டு பிரச்சினையை சமாளிப்பதற்காக தனது பயணத்தை பிரதமர் ரத்து செய்துவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, பெட்ரோல் தட்டுப்பாட்டு பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக உயர்நிலைக் குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது.
அரசு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முடியாது என வங்கிகள் மறுத்ததால் இறக்குமதியை பாகிஸ்தான் அரசு எண்ணெய் நிறுவனம் குறைத்திருக்கிறது. எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் பங்க்குகளில் நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் நிலை உள்ளது.