

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலையை துண்டித்து கொலை செய்வோம் என்று ஐ.எஸ். தீவிர வாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவர் களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படையினர் தற்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பிணைக்கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்க கூட்டுப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெஷ்மெர்கா நகர் மீது அமெரிக்க போர் விமானங்கள் கொத்து கொத்தாக குண்டுகளை வீசி வருகின்றன.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிய வீடியோவை வெளியிட்டுள் ளனர்.
அதில், ‘அதிபர் ஒபாமா தலையை துண்டித்து கொலை செய்வோம், அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம். அமெரிக்கா மட்டுமன்றி பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இராக்கின் சிறுபான்மை இனமான குர்து மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்’ என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.