

பரஸ்பர மரியாதை, இறையாண்மையைப் பேணுவதில் சமத்துவம் என இந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது என்று அநாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானுக்கு இந்தியா மிகவும் முக்கியமான அண்டை நாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து நவாஸ் ஷெரீப் மேலும் கூறும்போது, "இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான அண்டை நாடு. பரஸ்பர மரியாதை, இறையாண்மையைப் பேணுவதில் சமத்துவம் என இந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது.
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை போன்ற நீண்ட கால சர்ச்சைகளுக்கு இருநாடுகளும் தீர்வு காண வேண்டியது அவசியம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடந்த பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. ஆனால், இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் அப்துல் பாஸித், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தையடுத்து இந்தப் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. அதன்பிறகு தடைபட்ட பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில், பரஸ்பர மரியாதை, இறையாண்மையைப் பேணுவதில் சமத்துவம் என இந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது என அநாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.