

பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. தவறு செய்தவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதும், கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பத்திரிகை சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள் என்று பான் கி-மூன் கூறியுள்ளார்.
பாரீஸில் நடைபெற்றள்ள தாக்குதல் மிகவும் காட்டுமிராண் டித்தனமான, கோழைத் தனமான தாக்குதல். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஐ.நா. பாதுகாப்பு சபை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸு அதிபர் ஹோலாந்த்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாரீஸில் நடை பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனது அதிர்ச்சியையும், கவலையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இதில் தொடர்புடைய தீவிர வாதிகளை பிடிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க அமெரிக்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.