

உக்ரைனின் மேரிபோல் நகர் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின் றனர். ரஷ்ய ஆதரவாளர்களான அவர்கள் உக்ரைனுடன் இணைய மறுத்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆயுதங்களை அளிக் கிறது என்று உக்ரைன் அரசும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளும் விதிக்கப்பட் டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் தலையீட்டின்பேரில் உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் அங்கு அமைதி நிலவியது.
ஆனால் இருதரப்பினரும் அண்மையில் சண்டை நிறுத்தத்தை மீறியதால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கிழக்கு உக்ரைன் பகுதியில் மீண்டும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள மேரிபோல் நகர் மீது கிளர்ச்சிப் படை நேற்றுமுன்தினம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. இவ்விவகாரத் தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரோவ் கூறியபோது, சண்டைநிறுத்த மீறலுக்கு உக்ரைன் அரசுதான் காரணம். அரசு படைகளின் தாக்குதலால் பலர் உயிரிழந் துள்ளனர், பல்லாயிரக்கணக் கானோர் அகதிகளாகி உள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.
கடந்த ஏப்ரல் முதல் இதுவரை உள்நாட்டுப் போரில் 5100 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மீண்டும் போர் வெடித்திருப்பதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று ஐ.நா. சபை அச்சம் தெரிவித்துள்ளது.