மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் நடத்த அல் - காய்தா அழைப்பு

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் நடத்த அல் - காய்தா அழைப்பு
Updated on
1 min read

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் (உல்ஃப் அட்டாக்- திடீர்த்தாக்குதல்) நடத்த அல்-காய்தாவின் ஏமன் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் மார்க்கெட்டிலும் சமீபத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தின் ஏமன் நாட்டுப் பிரிவு பொறுப்பேற்றது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், மேலும் பல தாக்குதல் நடத்த திட்டமிட்டுப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அல்-காய்தாவின் ஏமன் பிரிவு தனது எச்சரிக்கையை புதுப்பித்து மற்றொரு அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக சைட் புலனாய்வு குழு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் அரேபிய தலைமை கமாண்டர் அலி-அன்ஸி கூறியதாக, "அல்-காய்தாவின் அரேபிய பிரிவு தற்போது மேற்கத்திய நாடுகளை குறிவைத்துள்ளது.

சர்வதே விமானங்களை தகர்ப்பது அல்லது வாஷிங்டனை அதிர வைத்தது போன்ற தாக்குதலாக அவை அமையும்.

இதற்காக நாங்கள் அயராது பணியாற்றி வருகிறோம். எங்கள் உழைப்பையும் அதலிருக்கும் அபாயத்தையும் எங்களது எதிரிகள் நன்கு அறிவார்கள்" என்று கூறியதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in