Published : 20 Jan 2015 08:25 AM
Last Updated : 20 Jan 2015 08:25 AM

ஒபாமாவின் இந்தியப் பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் இருந்து வந்தவர்களால் ஏதேனும் தாக்கல் நடத்தப்பட்டது தெரியவந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்க உள்ளார். குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது இதுவே முதல்முறை.

டெல்லி ராஜபாதையில் திறந்தவெளி மேடையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து அவர் குடியரசு தின விழா அணி வகுப்பை பார்வையிடுகிறார். இதனால் அவரது பாதுகாப்பில் அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஒபாமாவின் பயணத்தின்போது, இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களோ அல்லது அதற்கான முயற்சிகளோ நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலி யுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏதேனும் தாக்கு தல் நடந்து, இதில் பாகிஸ்தா னுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாட் டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல் படும் பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவில் அமெரிக்கத் தலைவர்கள் பயணத்தின்போது தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆண்டு மார்ச் மாதத் தில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டர் இந்தியா வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்தநாக் மாவட்டத் தில் 36 சீக்கியர்களை தீவிரவாதி கள் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் ஒபாமா பயணத்தையொட்டி ஆப்கானிஸ் தானில் உள்ள அமெரிக்கப் படைகளும் தங்கள் பிராந்தியத் தில் தீவிரவாதிகளின் செயல்பாடு களை தீவிரவாக கண்காணித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா நடை பெறும் டெல்லி ராஜபாதையை சுற்றிலும் டெல்லி போலீஸார் 80 ஆயிரம் பேருடன் துணை ராணுப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

விழாவில் பங்கேற்கும் வி.வி.ஐ.பி.க்கள் பகுதியைச் சுற்றி லும் 7 அடுக்கு பாதுகாப்பு வளை யம் அமைக்கப்பட உள்ளது. பிரத்யேகமாக ரேடார்கள் நிறுவப் பட்டு வான் பகுதியும் கண்காணிக் கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x