Last Updated : 20 Jan, 2015 05:55 PM

 

Published : 20 Jan 2015 05:55 PM
Last Updated : 20 Jan 2015 05:55 PM

சார்லி ஹெப்டோ கார்ட்டூனுக்கு எதிராக போராட்டம்: நைஜரில் 45 தேவாலயங்களுக்கு தீ வைப்பு



பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் நபிகள் நாயகத்தை சித்தரித்து மீண்டும் கருத்துச் சித்திரம் வெளியிடப்பட்டதை எதிர்த்து, ஆப்பிரிக்க நாடான நைஜரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது.

இதில் 5 பேர் பலியாகினர், 128 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 45 தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயங்கும் அங்கத வார இதழ் சார்லி ஹெப்டோவில் நபிகள் நாயகத்தை சித்தரித்து வெளியான கருத்துச் சித்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்பிரிக்க நாடான நைஜரில் நடந்த போராட்டத்தில் மிகப் பெரிய கலவரம் உருவானது.

நைஜர் தலைநகர் நியாமேயில் நடந்த போராட்டத்தின்போது ஒரு பகுதியினர் சுமார் 45 தேவாலயங்களை தீயிட்டு எரித்தனர்.

இந்தக் கலவரத்தில் குறைந்தது 5 பேர் பலியானதாகவும், சிறார்கள் உட்பட 128 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் 36 சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x