Published : 24 Jan 2015 10:09 AM
Last Updated : 24 Jan 2015 10:09 AM

விதிமுறைகளை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்: மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மாநகரப் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் இறைச் சிக் கடைகள் மீது நட வடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள் ளது.

இந்திய கால்நடைகள் நலன்களுக்கான மக்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.அருண் பிரசன்னா இது தொடர்பாக சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தின் தென்னிந்திய அமர் வில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது.

சென்னையில் இறைச்சிக் காக கால்நடைகளை வெட்டுவதில் முறையான விதிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை. கால்நடை களை வெட்டுவதால் வெளியேறும் ரத்தம் கால்வாய்களில் விடப் படுகிறது. இறைச்சிக் கழிவுகள் குவிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுகின்றன. இதனால் சுகாதார கேடு களும், சுற்றுச்சூழல் பாதிப்பு களும் ஏற்படுகின்றன. ஆகவே, முறையாக உரிமம் பெறாமலும், விதிமுறைகளை மீறியும் செயல்படும் இறைச் சிக் கடைகளை மூட தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத் துறை உறுப் பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் டி.ஆனந்த் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1315 இறைச்சிக் கடைகள்

“சென்னையில் மொத்தம் 1315 இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 மாதங்களில் உரிமம் இன்றி செயல்பட்ட 220 கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 கடை களுக்கு புதிதாக உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 48 கடைகளுக்கு உரிமம் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட 8 ஆயிரம் கிலோ இறைச்சி பறி முதல் செய்யப்பட்டு, அழிக்கப் பட்டுள்ளது” என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

59 கடைகள்

எனினும், சென்னையில் உரிமம் பெறாமல் 59 கடைகள் இயங்கி வருவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு தீர்ப்பாய உறுப்பினர்கள் உத்தரவிட்ட னர்.

மேலும் வழக்கு விசா ரணையை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x