Last Updated : 27 Jan, 2015 10:31 AM

 

Published : 27 Jan 2015 10:31 AM
Last Updated : 27 Jan 2015 10:31 AM

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: பாகிஸ்தானில் 9,000 பேர் கைது

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 9 ஆயிரம் பேரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகளுக்கு எதிரான நடடிக்கையின் ஒரு பகுதியாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதகுருமார்கள் ஆவர்.

பெஷாவர் நகர ராணுவப் பள்ளியில் கடந்த மாதம் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 136 மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பயங்கரவாத செயல்களுக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்தது. இதன் ஒருபகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாப், கைபர்-பக்துன்கவா மாகாணங்கள் மற்றும் இஸ்லாமாபாத் நகரிலிருந்து பல்வேறு மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் இருந்து இதுவரை 3,100 மதகுருமார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத செயல்களில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆப்கானிஸ்தான் அகதிகள் சுமார் 3,650 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இதுதவிர தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் முறையே 490 மற்றும் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பஞ்சாப் மற்றும் கைபர்-பக்துன்கவா மாகாணங்களில் 9,912 இடங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் 5,510 பேர் கண்காணிக்கப்பட வேண்டியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் அதிகபட்சமாக கைபர்-பக்துன்கவா மாகாணத் தில் மட்டும் 6,702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x