Last Updated : 28 Jan, 2015 11:59 AM

 

Published : 28 Jan 2015 11:59 AM
Last Updated : 28 Jan 2015 11:59 AM

அமெரிக்காவை நான் நம்பவில்லை : கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கருத்து

“அமெரிக்காவை நான் நம்பவில்லை, அந்நாட்டிடம் பேசவும் இல்லை” என்று கியூபாவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் அதிபருமான பிடஸ் காஸ்ட்ரோ (88) கூறியுள்ளார்.

“என்றாலும் அந்நாட்டுடனான பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதை நிராகரிப் பதாக இதற்கு அர்த்தமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காஸ்ட்ரோ எழுதிய கடிதம் கியூபா அரசு தொலைக் காட்சியில் நேற்று முன்தினம் வாசிக்கப்பட்டது. அதில் அவர் இக்கருத்தை கூறியுள்ளார்.

அமெரிக்கா கியூபா இடையி லான உறவை சீர்படுத்தும் முயற்சியாக, இருநாட்டுப் பிரதி நிதிகளும் ஹவானாவில் பேச்சு நடத்திய ஒரு வாரத்தில் பிடல் காஸ்ட்ரோ இவ்வாறு கூறியுள்ளார்.

பனிப்போர் காரணமாக 1961-ம் ஆண்டு முறிந்துபோன இரு நாட்டு உறவை புதுப்பிப்பது என அமெரிக்க அதிபர் ஒபாமா வும் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ வும் கடந்த டிசம்பர் மாதம் அறி வித்தனர்.

இது தொடர்பாக இரு நாடுகளிடையே நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தையில் போப் பிராஸ் சிஸ் முக்கியப் பங்காற்றினார். இதைத் தொடர்ந்தே டிசம்பரில் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு தொடர்பாக, அமெரிக்க எம்.பி.க்கள் சிலர் ஒபாமாவை விமர்சித்தனர். கியூபா வம்சாவளி அமெரிக்கர்களான இந்த எம்.பி.க்கள், “மனித உரிமைகள் தொடர்பாக எந்த உறுதிமொழியையும் பெறாமல் ஒபாமா மிகவும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டுள்ளார்” என்றனர்.

அமெரிக்காவுடனான உறவை சீர்படுத்தும் கியூபா அதிபரும் தனது தம்பியுமான ரவுல் காஸ்ட்ரோவின் முயற்சி குறித்து பிடல் காஸ்ட்ரோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தனது கருத்தை கூறி சர்வதேச பார்வையாளர்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளார்.

கியூபா மீதான தடைகளை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். அதிபர் என்ற முறையில் தனக் குரிய அதிகாரத்தின் கீழ் கியூபா மீதான கட்டுப்பாடுகள் சிலவற்றை (வர்த்தகம், பயணம்) அவர் தளர்த்தி யுள்ளார். மேலும் பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூ பாவை நீக்குவது தொடர்பாக ஆரா யுமாறு வெளியுறவுத் துறைக்கு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

கியூபாவில் புரட்சி மூலம் 1959-ல் ஆட்சி அதிகாரத்தை பிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக 2006-ம் ஆண்டு, அதிபர் பதவியில் இருந்து விலகிய பிடல் காஸ்ட்ரோ தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவுக்கு அந்தப் பொறுப்பை வழங்கினார்.

அமெரிக்க கண்டத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெறும் ஒரே நாடு கியூபா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x