டைம் சிறந்த மனிதர் விருது: மீண்டும் முதல் இடத்தில் மோடி

டைம் சிறந்த மனிதர் விருது: மீண்டும் முதல் இடத்தில் மோடி
Updated on
1 min read

இந்த ஆண்டின் சிறந்த மனிதருக்கான 'டைம்' இதழின் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான வாக்கெடுப்பு இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 9.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டக்காரர்கள் 10.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் வகித்தனர்.

நவம்பர் 26-ம் தேதி வரை பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார். ஆனால் பெர்குசன் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அப்போராட்டக்காரர்கள் முதலிடத்துக்கு முன்னேறினர்.

மீண்டும் மோடி முதலிடம்

இந்தந் நிலையில், மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நிலவரப்படி, பெர்குசன் போராட்டக்காரர்களை பின்னுக்கு தள்ளி 12.8 சதவீத வாக்குகளை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். பெர்குசன் போராட்டக்காரர்கள் 10.1 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

அதே போல 3-ஆம் இடத்தில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங் உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா 4-ஆம் இடத்திலும் உள்ளார்.

எபோலா நோய் எதிர்ப்புக்காக போராடி வரும் மருத்துவ குழு 5-வது இடத்தில் உள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 6-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாக்குகளும் சரிந்து மிகவும் பின் தங்கிய நிலையாக வெறும் 2.3 சதவீத வாக்குகள் பெற்று 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in