

இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் 17 மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 6.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை பகுதியிலுள்ள ரில்போலா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குமட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மிக மோசமான பருவநிலை காரணமாக கொழும்பிலிருந்து கண்டி, பதுளை, மாத்தளை பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் அதிகரித்து பெருமழைக்குக் காரணமாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.