Published : 13 Dec 2014 10:56 AM
Last Updated : 13 Dec 2014 10:56 AM

சென்னையில் இன்று ரேஷன் குறைதீர்வு முகாம்: 16 மண்டலங்களில் நடைபெறுகிறது

குடும்ப அட்டை தொடர்பான குறைபாடுகளைத் தீர்ப்பதற் கான குறைதீர்வு முகாம் சென்னையில் 16 மண்டலங்களில் இன்று நடக்கிறது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 16 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் இன்று குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்பார் கள்

குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி திருத்தம், மாற்றம், பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடு, பொருட்கள் கிடைப்பது குறித்த தகவல், விநியோகிக்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தைக்கு விற்கப்படுதல், எடை குறைதல் உட்பட ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.

முகாம் நடைபெறும் மண்டலம், மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் விபரம்:

* சிதம்பரனார் - மியாசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்ணடி * ராயபுரம் - சிஎஸ்ஐ ராஜ கோபால் மேல்நிலைப்பள்ளி, ஜி.எம்.பேட்டை * பெரம்பூர் - சென்னை நடுநிலைப்பள்ளி, கோபாலபுரம் * திரு.வி.க. நகர், அண்ணாநகர் - சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை * அம்பத்தூர் - அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சாவடி தெரு * கொரட்டூர், வில்லிவாக்கம் - நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலனி, அண்ணாநகர் மேற்கு * திருவொற்றியூர் - ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி * ஆவடி - அண்ணா சமுதாயக் கூடம், மேல்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர் * தி.நகர் - அரசு மேல்நிலைப் பள்ளி மேற்கு மாம்பலம், 3வது அவென்யூ, அசோக் நகர் * மயிலாப்பூர் - புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கச்சேரி சாலை * பரங்கிமலை -  சந்திரசேகர திருமண மண்டபம், ஆதம்பாக்கம் * தாம்பரம் - லிடியா மெட்ரிக் பள்ளி, கஸ்பாபுரம், அகரம் * சைதாப்பேட்டை - சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை * ஆயிரம் விளக்கு - அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தனம் விரிவு, 5வது மெயின்ரோடு * சேப்பாக்கம் - சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரி, அருணாச்சலம் தெரு * சோழிங்க நல்லூர் - சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம், கண்ணகி நகர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x