

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிரான பொதுவேட்பாளர் சிறீசேனாவுக்கு தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்ஏ தலைவர் ராஜவயோதி சம்பந்தன் கூறும்போது, “இலங்கையைச் சீர்படுத்துவதில் ராஜபக்சே தோல்வியடைந்துவிட்டார். எனவே, நாங்கள் மைத்ரிபால சிறீசேனாவுக்கு முழு ஆதரவையும் அளிப்போம்” என்றார். இதன் மூலம், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் இரு முக்கியக் கட்சிகளுமே ராஜபக்சவுக்கு எதிராக திரண்டுள்ளன.