இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 100 பேர் மாயம்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 100 பேர் மாயம்
Updated on
1 min read

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 100 பேர் மாயமானதாக தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து பஞ்சங்கிரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணியின்போது மண்ணில் புதையுண்டிருந்த 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாகவும், சுமார் 100 பேர் மாயமானதாகவும் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in