Published : 02 Dec 2014 12:12 PM
Last Updated : 02 Dec 2014 12:12 PM

ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: மின் வாரிய தலைவராக எம்.சாய்குமார் நியமனம்

தமிழகத்தில் தலைமைச் செயலாளர் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி மற்றும் துறை விவரங்கள் வருமாறு:

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சா யத்து ராஜ் விரிவாக்க முதன்மைச் செயலர் என்.எஸ்.பழனியப்பன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எம்.சாய்குமார், தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

வருவாய்த்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேம்பாட்டுத் துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். நகர்ப்புற கட்டமைப்பு திட்டமிடல் துறையின் ஆணையர் ஆர்.வெங்கடேசன், வருவாய்த் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் முகம்மது நஸீமுதீன், கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை முதன் மைச் செயலராகவும் அங்கு பணி யாற்றிய எம்.பி.நிர்மலா, தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனங்கள் கழக (டான்சி) தலைவராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையர் தர்மேந்திர பிரதாப் யாதவ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பணியில் இருந்த மோகன் பியாரே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட முன் னாள் ஆட்சியர் சி.மனோகரன், வேளாண் வணிகத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை இந்தப் பதவியை சி.ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளி யியல் துறை ஆணையர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலர், துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மாற்றப்பட் டுள்ளார். அங்கு பணியாற்றிய ரமேஷ் குமார் கண்ணா ஓய்வு பெற்றுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செய லராக கடந்த ஏப்ரல் 1-ம் தேதிதான் மோகன் வர்கீஸ் சுங்கத் பதவி யேற்றார். 8 மாதங்களில் அவர் திடீரென மாற்றப்பட்டு, புதிய தலை மைச் செயலராக கே.ஞானதேசி கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலர் மாற்றம் பின்னணி என்ன?

புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட கே.ஞானதேசிகன் நேற்று மாலை 4.35 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசு செயலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஞானதேசிகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தற்போதைய அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மோகன் வர்கீஸ் புதிய தலைமைச் செயலரானார். இவர் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் எழவில்லை.

தற்போது அவருக்கும் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், பல்வேறு முக்கிய கோப்புகளை தீவிர ஆய்வுக்குப் பிறகே ஒப்புதல் தரமுடியும் என்று மோகன் வர்கீஸ் தாமதித்ததாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 36 ஆண்டுகளுக்குமேல் பணியில் உள்ள மோகன் வர்கீஸ், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவன பணியை தானே தேர்வு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x