Last Updated : 20 Dec, 2014 09:50 AM

 

Published : 20 Dec 2014 09:50 AM
Last Updated : 20 Dec 2014 09:50 AM

ஜப்பானில் பனிப் புயலுக்கு 11 பேர் பலி

ஜப்பானில் வீசி வரும் குளிர்கால பனிப் புயலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மோசமான வானிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜப்பானின் மத்திய பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதுடன் குளிர் காற்றும் வீசி வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்துள்ளது. சில இடங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளன. குறிப்பாக சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்திருப்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான விமானங்கள் குறிப்பாக உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் பனி காரணமாக, பனிக்கட்டிகளை அகற்றிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் தவறி விழுந்த தீயணைப்புப் படை வீரர், 79 வயது முதியவர் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி சிலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

நிகாடா மற்று நகனோ உள்ளிட்ட மலைப் பகுதியை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே ஒரு சாலையில் பனி படர்ந்துள்ளதால் 270-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கி உள்ளனர். இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு கடும் பனிப்பொழிவு தொடரும் என்றும் கடலோரப் பகுதியில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x