தேர்தலில் வென்றால் இலங்கை அதிபரின் அதிகாரம் குறைக்கப்படும்: ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடும் ஸ்ரீசேனா அறிவிப்பு

தேர்தலில் வென்றால் இலங்கை அதிபரின் அதிகாரம் குறைக்கப்படும்: ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடும் ஸ்ரீசேனா அறிவிப்பு
Updated on
1 min read

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் அதிபர் பதவிக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்கப்படும், ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடும் மைத்ரிபால ஸ்ரீசேனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கையின் எதிர்க்கட்சிகள், தொழிற்சங் கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி மாதம் 8-ம்தேதி நடை பெறவுள்ளது. இதில் இப் போதைய அதிபர் ராஜபக்ச மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி களின் பொது வேட்பாள ராக ராஜபக்ச அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீசேனா களமிறங்கியுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததுடன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்ச நீக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட தொழில்முறை சங்கத்தினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தான் அதிபரானால் காவல் துறை, நீதித்துறை, அரசு நிர் வாகம் ஆகியவை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும். அதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்காது என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கை அதிபருக்குள்ள அதிகாரங்கள் குறைக்கப்படும். அதிபரான பிறகு அதிகபட்சம் 2 ஆண்டுகளில் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிகள் அடங்கிய தேசிய அரசு அமையும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்ரீசேனா உறுதி யளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். இலங்கையை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக ராஜபக்ச மீது ஸ்ரீசேனா குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in