Last Updated : 31 Dec, 2014 12:21 PM

 

Published : 31 Dec 2014 12:21 PM
Last Updated : 31 Dec 2014 12:21 PM

ரூபாய் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ரூ.10,000 கோடி

டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை நிலவுவதால் எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நஷ்டம் அதிகரித்துள்ளது. இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நஷ்டம் ரூ.10,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் எண்ணெய் நிறுவனங் களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதிச்சுமையை குறைக்க பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த உள்ள தாகவும் தெரிவித்துள்ளன.

இந்தியன் ஆயில், ஹிந்துஸ் தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விலை மாற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சமாளிக்க முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், அதிக விலை விற்கும்போது வாங்கி இருப்பு வைத்ததால் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் காசோலின், டீசல் காஸ் இவற்றின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் ஸ்திரதன்மை இவற்றை பொறுத்தே மாற்றியமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு டிசம்பர் 16 ஆம் தேதி யிலிருந்தே குறைந்து வருகிறது. தற்போது சராசரியாக ரூ.63.46 ஆக இருக்கிறது. கடந்த முறை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டபோது ரூபாய் மதிப்பு ரூ.61.95 ரூபாயாக இருந்தது என்பதை எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. கச்சா எண்ணெய் மற்றும் தயாரிப்பு செலவுக்குமான வித்தியாசம் பேரல் ஒன்றுக்கு 8 டாலர் முதல் 9 டாலர் வரை இருந்தது தற்போது பாதியாக குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்பட்டன. இதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கையிருப்பால் நஷ்டத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் சரிவு காரணமாக இந்த கையிருப்பு நஷ்டமும் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் மூன்று எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நஷ்டம் ரூ. 5,300 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விலை மாற்றத்தின் பின்னால் உள்ள நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி யமைத்து வரும் நிலையில் புதன்கிழமை இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை கடைசியாக கடந்த 16 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலையை எட்டு முறையும், டீசல் விலை நான்கு முறையும் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து கூட்டுமதிப்பில் ரூ.12.27 வரை பெட்ரோல் விலை குறைக் கப்பட்டுள்ளது, டீசல் விலை ரூ.8.46 வரை குறைக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன, கடந்த ஜூன் மாதத்தில் 115 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 60 டாலர் என்கிற அளவில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x