

பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தீவிரவாத தடுப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்க பொது மக்களுக்கு பிரத்தியேக உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.
பெஷாவார் தாக்குதலை அடுத்து தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது. அதன்படி பொது மக்கள் தங்கள் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் ஏதேனும் நடப்பதாக தெரிந்தால், அதனை 1717 என்ற எண்ணில் உதவி மையத்துக்கு தெரியப்படுத்தலாம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த உதவி எண்ணுக்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் உள்துறை அமைச்சகம் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கும் இணைக்கப்பட்ட சேவையாக அமைக்கப்பட்டுள்ளது.