

இராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
செனட் சபையின் வெளியுறவு விவகாரக் குழு, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக ராணுவத் தைப் பயன்படுத்துவதற்கான அங்கீகார (ஏயுஎம்எப்) மசோதாவுக்கு ஒப்புதல் அளித் துள்ளது. இதன்படி, ஐஎஸ் அமைப்புக்கு எதிராக மூன்று ஆண்டுகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க அதி பருக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது.
செனட் உறுப்பினரும், வெளியுறவு விவகாரக் குழு தலைவருமான ராபர்ட் மெனந்தஸ் கூறும்போது, “குறிப்பிட்ட சில சூழ்நிலையைத் தவிர ஐஎஸ் அமைப்புக்கு எதிராக தரை வழியாக போரிடுவதை இந்த மசோதா கட்டுப்படுத்துகிறது” என்றார்.
ஏயுஎம்எப் மசோதா தொடர்பான வாக்கெடுப்பின்போது, ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகின. முன்ன தாக இந்தக் குழு முன்பு ஆஜரான அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு இந்த மசோதாவை ஆதரிக்குமாறு செனட் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.