Last Updated : 19 Dec, 2014 05:28 PM

 

Published : 19 Dec 2014 05:28 PM
Last Updated : 19 Dec 2014 05:28 PM

உலக அளவில் 6 சதவீதத்துக்கும் அதிகமானோர் இணைய பயன்பாட்டுக்கு அடிமை

உலக அளவில் 6 சதவீதத்துக்கும் அதிகமானோர் இணைய பயன்பாட்டுக்கு அடிமையாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த வகையில் இணைய பயன்பாட்டுக்கு அடிமையான நபர்கள் தங்களது உடல் அளவிலும் உறவுகளிடையேவும் மிகப் பெரிய அளவில் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் உலக அளவில் 6 சதவீதத்துக்கும் அதிகமானோர் இணைய பயன்பாட்டுக்கு அடிமையானவர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 31 நாடுகளில் 89,000-த்துக்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய பயன்பாட்டில் அடிமையான நபர்கள் இணையத்தின் உபயோகத்தை தங்களால் எந்த சமயத்திலும் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் இணையத்தை உபயோகிப்பதில் சுயகட்டுப்பாடு இல்லாதவர்களாக இருப்பதோடு அல்லாமல் குடும்ப மற்றும் பொது வாழ்விலும் இணக்கமாக ஈடுபட முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் சியேலா ஷெங் மற்றும் ஏஞ்சல் யூ கூறுகையில், "எங்களது உலக அளவிலான ஆய்வின் முடிவில் சர்வதேச நாடுகள் அனைத்திலும் 6 சதவீதத்துக்கும் அதிகமானோர் இணைய பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளதாக தெரிகிறது.

வடக்கு நாடுகளில் மிக குறைந்த அளவாக 2.6 சதவீதத்தினரும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாக 10.9 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய நாடுகளான சீனா, ஹாங்காங், இந்தியா, தென் கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மொத்தமாக 7.1 சதவீதத்தினர் இணைய பயன்பாட்டுக்கு அடிமையானவர்களாக உள்ளனர். நாங்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைய அடிமைத்தனத்தால் அவர்கள் எதிர்கொள்ளும் நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டோம்.

சைபர் உளவியல் பிரச்சினைகள், சமூக வலையமைப்பு, நடத்தையில் மாற்றம் போன்ற அவர்களது அனுபவங்கள் அனைத்தும் எங்களது ஆய்வு குறிப்பில் இணைத்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x