சத்யார்த்தி, மலாலாவுக்கு பாராட்டு : அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

சத்யார்த்தி, மலாலாவுக்கு பாராட்டு : அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்
Updated on
1 min read

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான தீர்மானத்தை செனட் உறுப்பினர் டாம் ஹர்கின் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 113-வது அமர்வில் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: இந்தியரான சத்யார்த்தியும் பாகிஸ்தானின் மலாலாவும் அமைதியின் சின்னமாக விளங்குகின்றனர்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், சத்யார்த்தி இதுவரை 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலா ளர்களை மீட்டுள்ளார். மலாலா தனது 11-வது வயதிலிருந்தே பாகிஸ்தான் சிறுமிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் மலாலாவை கொல்ல முயற்சித்தனர். அதிலிருந்து அவர் தப்பிவிட்டார்.

இப்போது உலகம் முழுவதும் இதுகுறித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதுபோல உலகம் முழுவதும் சிறுவர்களின் உரிமைக்காக பாடுபடும் அனைவருக்கும் இந்த அவை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹர்கின் கூறும்போது, “குழந்தைகளின் உரிமைக்காக போராடி வரும் சத்யார்த்தி, மலாலா ஆகியோரை கவுரவித்த செனட் அவைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக ஹர்கினும் பாடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in