ஆப்கானிஸ்தான் அமைச்சரை மர்ம நபர்கள் கடத்தினர்: அதிகாரிகள்

ஆப்கானிஸ்தான் அமைச்சரை மர்ம நபர்கள் கடத்தினர்: அதிகாரிகள்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் பொதுப் பணித் துறை துணை அமைச்சர் இன்று காலை பணிக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காபூல் காவல்துறை அதிகாரி குல் அகா ஹஸ்மி கூறுகையில், "இன்று காலை காபூல் பொதுப் பணித் துறை துணை அமைச்சர் அகமது ஷா, பணிக்கு செல்லும் வழியில் அவரது காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டனர்.

அப்போது, காரின் ஓட்டுனர் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக காரை வேகமாக ஓட்டினார். இருப்பினும், கடத்தல்காரர்கள் காரை மறித்து அமைச்சரை தாக்கி, அவரை தங்களது வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் அமைச்சரின் வாகன ஓட்டுனர் காயமடைந்தார். இதுவரை கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் குறித்து தகவல் ஏதும் அறியப்படவில்லை" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in