ஐ.எஸ். அமைப்பை ஒடுக்க கூடுதல் அதிகாரம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தல்

ஐ.எஸ். அமைப்பை ஒடுக்க கூடுதல் அதிகாரம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தல்
Updated on
1 min read

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஒடுக்குவதற்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். இது தொடர்பாக செனட் வெளியுறவுத்துறை குழு உறுப்பினர்களிடம் ஜான் கெர்ரி கூறியதாவது:

ஐ.எஸ். தீவிரவாதிகளின் நோக்கத்தை முறியடித்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியையும், ஸ்திரத்தன் மையையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு கூடுதல் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் வழங்க வேண்டும்.

ஐ.எஸ். தீவிரவாதம் தொடர்ந்து பல நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு இருக்கிறது. அதை தடுத்து நிறுத் தாவிட்டால், சர்வதேச நாடுகளின் பாதுகாப்புக்கும், அமெரிக்க தேசத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறிவிடும். குறிப் பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தி விடும்.

ஐ.எஸ். தாக்குதல் நடத்தி வரும் இராக், சிரியாவிலிருந்து அகதிக ளாக பிற நாடுகளில் தஞ்சமடை வோரின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இது அந்த பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தரைப்படையை பயன்படுத்தக் கூடாது என்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் கருத்து, நமது படைத் தளபதியின் கைகளைக் கட்டிப் போட்டது போல உள்ளது. விமானப் படையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி, போர்க்களத்தின் நிலவரத்துக்கு ஏற்ப தேவையான படைகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அதோடு, குறிப்பிட்ட பகுதிக்குள்தான் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற வரையறையையும் ஏற்படுத்தத் தேவையில்லை. இராக், சிரியாவைத் தவிர பிற நாடுகளில் தாக்குதல் நடத்தும் அவசியம் இப்போது இல்லை. ஆனால், அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள நாடுகளில் பதுங்கினாலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in