

ஜப்பான் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபேவுக்குஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 475 இடங்களில் ஷின்சோ அபேவின் முற்போக்கு ஜனநாயகக் கட்சி 291 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த வெற்றி தொடர்பாக ஷின்சோ அபே கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சி நிர்வாகத்தில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தோம். தற்போது வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட திட்டங்களை புது உத்வேகத்துடன் செயல்படுத்தவுள்ளோம். இவ்வாறு அபே கூறினார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேர்தலில் வெற்றி பெற்ற அபேவுக்கு வாழ்த்துகள் . உங்களுடன் இணைந்து பணியாற்றி, நட்புறவை மேலும் வலுப்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.