முஸ்லிமாக மாற விரும்பிய சர்ச்சில்

முஸ்லிமாக மாற விரும்பிய சர்ச்சில்
Updated on
1 min read

இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இளைஞராக இருந்தபோது இஸ்லாமுக்கு மதம்மாற விரும்பினார் எனும் தகவல் சமீபத்தில் கிடைத்த கடிதம் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக, சூடான் நாட்டில் சர்ச்சில் பணியாற்றியுள்ளார். அப்போது அவருக்கு இஸ்லாம் மதம் குறித்து அறிமுகம் கிடைத்தது.

இதனால் இஸ்லாமுக்கு சர்ச்சில் மதம்மாற விரும்பினார். அதைத் தொடர்ந்து அதுகுறித்து 1907ம் ஆண்டு தன்னுடைய நண்பர் லைட்டன் சீமாட்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில், "நான் ஒட்டோமன் பேரரசில் 'பாஷா'வாக இருந்திருக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இஸ்லாம் மீது இவருக்கு இருந்த நாட்டத்தைப் பார்த்து கவலையடைந்த இவரின் உறவினரான வெண்டோலின் பெர்டி சீமாட்டி சர்ச்சிலுக்கு எழுதிய கடிதத்தில், "இஸ்லாமிய கலாச்சாரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பதை நான் அறிகிறேன். நீங்கள் நினைப்பதை விடவும் மிகச் சுலபமாக மதம் மாற்றி விடுவார்கள். எனவே, அத் தகைய எண்ணங்கள் இருந்தால் அதனை எதிர்த்துப் போராடவும். தயவு செய்து இஸ்லாமுக்கு மதம்மாறி விடாதீர்கள்" என்று மன்றாடியுள்ளார்.

இந்தக் கடிதத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வாரன் டாக்டர் கண்டுபிடித்துள் ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, "இஸ்லாமுக்கு மதம் மாறுவதை சர்ச்சில் தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை. அப்போது அவர் நாத்திகவாதியாக இருந்தார். எனினும், இஸ்லாம் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது" என்றார்.

இங்கிலாந்தில் உள்ள ரீஜென்ட் பூங்காவில் மசூதி கட்டுவதற்கு 1940ம் ஆண்டு ஒரு லட்சம் பவுண்டுகளை சர்ச்சில் ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in