தீவிரவாதிகளை விசாரிக்கும்போது கையாளப்பட்ட கடுமையான வழிமுறைகள் சரியானதுதான்: சி.ஐ.ஏ. தலைவர் பேட்டி

தீவிரவாதிகளை விசாரிக்கும்போது கையாளப்பட்ட கடுமையான வழிமுறைகள் சரியானதுதான்: சி.ஐ.ஏ. தலைவர் பேட்டி
Updated on
1 min read

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும்போது கடுமையான வழிமுறைகளை மேற்கொண்டது சரிதான் என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பின் தலைவர் ஜான் ப்ரென் னான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சி.ஐ.ஏ), சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து தகவல்களைப் பெற மிகக் கொடூரமான முறைகளைக் கையாண்டதாகச் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு செனட் அறிக்கையும் வெளியானது. அதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய சி.ஐ.ஏ. தலைவர் ஜான் ப்ரென்னான் கூறியதாவது:

"அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் சிலரைக் கைது செய்தோம். அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்குச் சில முறைகள் கையாளப்பட்டன. அவற்றில் சில, மிகக் கொடூரமாக இருந்தது உண்மைதான். ஆனால் அத்தகைய உத்திகளைப் பயன் படுத்தியதால் தான் ஒசாமா பின் லேடனைப் பற்றிய தகவல்களை எல்லாம் எங்களால் பெற முடிந்தது.

இதற்கு முன்பு நாங்கள் கைதிகளிடம் விசாரணை மேற் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை. ஆனால் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய அதிபர் எங்களுக்கு ஆணையிட்டார். அதன்படி நடந்தோம். அப்போது எங்கள் அதிகாரிகள் பலருக்கு கைதிகளிடம் விசாரணை நடத்துவதில் முறையான பயிற்சி இருக்கவில்லை.

அவர்களில் சிலர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டனர். ஆனால் எந்த நிலையிலும் எங்கள் அதிகாரிகள் சட்டத்தை மீறவில்லை". இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in