Published : 27 Dec 2014 10:31 AM
Last Updated : 27 Dec 2014 10:31 AM

ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடக்கம்

சேலம் ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி, பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. வெளிமாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி துவங்கப் படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தை யொட்டி இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று ஏற்காட்டில் இரண் டாம் பருவ மலர் கண்காட்சி துவங் கியது. குதிரைகள் அணிவகுப்பு, நாதஸ்வரம், தவில், நையாண்டி மேளம், கரகாட்டம், கோல்கால் ஆட்டம், தப்பாட்டம், வாண வேடிக்கை என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் படகு துறையில் இருந்து ஊர்வலம் துவங்கியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகர பூஷணம் தலைமை தாங்கினார். கிராமிய கலைஞர்களுடன், ஊர் வலமாக அண்ணா பூங்காவுக்கு சென்று மலர்க் கண்காட்சியை துவக்கி வைத்தார். மலர் கண்காட்சி யின் நுழைவு வாயிலில் 10 அடி உயரம் 15 அடி நீளம் அஸ்பராகஸ் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு அழகிய யானை வடிவமைக்கப்பட்டிருந்தது. பூங்காவுக்குள் ரோஜா, பாலசம், சோலியஸ், ஜெனியா, ஃபிளாக்ஸ் உள்ளிட்ட 45 உள்ளுர் மலர்களை கொண்டு பல்வேறு அழகிய வடி வமைப்புகளில் பூக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பூங்காவில் 8 அடி உயரம், 12 அடி நீளம், 15 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு, ஏற் காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற காட்டெருமை உருவம் வடி வமைக்கப்பட்டிருந்தது. சேலம் மட்டும் அல்லாமல் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங் களில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத் துடன் ஏற்காட்டுக்கு வந்திருந்தனர்.

வெளியூர் பயணிகள் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில், படகு துறை உள்ளிட்ட இடங்க ளுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர். கண்காட்சியை திறந்து வைத்து ஆட்சியர் க.மகர பூஷணம் பேசியதாவது: ஊட்டியை போல ஏற்காட்டிலும் மூன் றாவது ஆண்டாக இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு களில் இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி இரண்டு நாள் மட்டுமே நடந்து வந்தது. நடப்பாண்டு, இந்த மலர்க் கண்காட்சி மூன்று நாள் நடத்தப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x