

நடப்பு ஆண்டில் மட்டும் உலகெங்கிலும் குறைந்ததது 60 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுவின் ஆய்வு கூறுகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவானதுதான் என்று அந்த குழு தமது ஆறுதலை குறிப்பிடுகிறது.
குழுவின் ஆய்வின்படி 44 சதவீத பத்திரிகையாளர்கள் தங்களது பணியின் காரணத்தை கொண்டு திட்டமிட்டு படுகொலை செய்யபட்டுள்ளனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட குழு அதனை விரிவாக குறிப்பிடுகையில், "கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இம்முறை நடந்துள்ள படுகொலைகள் குறைவு தான். கடந்த ஆண்டுகளில் 70-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கான கணக்கு உள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது"
இதிலும் பல சர்வதேச பத்திரிகையாளர்கள் மோசமான முறையில் மிரட்டல்களுக்கு பல வகையிலான அச்சுறுத்தலுக்கும் உலகெங்கும் ஆளாகின்றனர்.
கவனிக்கும்படியாக 2014-ல் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் பிரபல புகைப்பட நிருபர் அஞ்சா நைதிரிகஸ் ஆப்கானிஸ்தான் தேர்தல் நிலவரம் குறித்து செய்தி சேகரித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1992-லிருந்து பார்க்கும்போது, கடந்த 3 ஆண்டுகள் பல நாடுகளில் குறிப்படும் வகையிலான கிளர்ச்சி சம்பவங்களும் போரும் நடந்துள்ளது. இதன் விளைவாகவே கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இவ்வாண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் படுகொலைகள் குறைவு என்று குறிப்பிடப்படுகிறது.
சிரியா உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு மட்டும் இந்த ஆண்டு குறைந்தது 17 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆண்டிலிருந்து அங்கு தங்களது பணியை செய்ததற்காக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 79-க்கும் அதிகம்.
இதில் முக்கியமாக ஐ.எஸ். அமைப்பினால் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கர்களான ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீபன் ஸாட்லாஃப் அடங்குவர். இவர்கள் இருவருமே சிரியாவின் சூழலை பதிவு செய்தபோது கடத்தப்பட்டு பின்னர் தலை கொய்து கொல்லப்பட்டனர்.
காஸாவில் நடந்த பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே ஆன போரில் ஏ.பி. நிறுவனத்தின் வீடியோ பதிவாளர் சிமோன் கெமிலி, மொழிப்பெயர்ப்பாளர் அலி அபு அஃபாஷ் ஆகியோர் வான்வழித் தாக்குதலில் பலியாகினர்.
இதே போல உக்ரைன் ஆட்சியாளர்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் இடையிலான போரில் 5 பத்திரிகையாளர்கள் மற்றும் 2 ஊடக குழுவினர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனில் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டது கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து இதுவே முதல் முறை. மியான்மர், பிராகுவே ஆகிய நாடுகளில் பத்திரிகையாளர்கள் பலியான சம்ப்வம் இந்த ஆண்டு முதன்முறையாக நடந்துள்ளது.
இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் படுகொலை குறைவே என்ற போதிலும் இவை தடுக்கப்பட வேண்டியவை என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.