

ஆஸ்திரேலியாவின் வெர்ஜின் புளு 730-700 ரக விமானம் கடத்தப்பட்டதாக வந்த தகவலை இந்தோனேஷிய ராணுவ தரப்பு மறுத்துள்ளது.
இந்தோனேஷியாவின் பாலி விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட செய்திகள் வெளியாகின.
தற்போது, விமானம் கடத்தப்பட்டு இந்தோனேஷியாவில் தரையிறக்கப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ள இந்தோனேசிய ராணுவம், "விமானி அறைக்குள் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் நுழைந்து அத்துமீறியதால், விமானம் அவசரமாக பாலி தீவில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக தவறான எச்சரிக்கை செய்தி வெளியாகி உள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளது.