Last Updated : 16 Dec, 2014 08:25 PM

 

Published : 16 Dec 2014 08:25 PM
Last Updated : 16 Dec 2014 08:25 PM

பெஷாவர் பள்ளி தாக்குதல்: பயங்கரத்தை நேரில் கண்ட மாணவர்

பெஷாவரில் ராணுவப் பள்ளியில் புகுந்து தாலிபான்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய போது இறந்தது போல் நடித்து தப்பித்த மாணவர் அங்கு நடந்ததை விவரித்துள்ளார்.

தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருகால்களிலும் குண்டு பாய்ந்த அந்த 16-வயது மாணவர் இறந்தது போல் பாவனை செய்து தப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த இந்த மாணவர் செய்தி நிறுவன நிருபரிடம் தெரிவிக்கும் போது, இவரும் இவரது சக தோழர்களும் பள்ளி ஆடிட்டோரியத்தில் கரியர்-கைடன்ஸ் பாட அமர்வில் இருந்தனர். அப்போது ராணுவத்தினர் போல் உடையணிந்து கொண்டு 4 பேர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தனர்.

“அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் டெஸ்க் அடியில் ஒளிந்து கொள்ளுமாறு எங்களை நோக்கி கேட்டது. துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் கடவுளின் பெயரைக் கூறி சுடத் தொடங்கினார்.

அப்போது ஒருவர் கத்தினார். அதாவது பெஞ்சின் அடியில் ஏகப்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்களைப் பிடியுங்கள் என்றார்.

எனது அருகில் மிகப்பெரிய ஷூக்களை அணிந்த கால்கள் வந்தன. .இவர்தான் டெஸ்கிற்கு அடியில் ஒளிந்திருக்கும் மாணவர்களை பிடிக்க வந்தவர் என்று நான் நினைத்தேன்” என்று கூறிய இந்த சிறுவனின் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது.

“உடனே நான் எனது கழுத்து டையை மடித்து வாயில் சொருகிக் கொண்டேன் அப்போதுதான் கத்த மாட்டேன் என்று. தொடர்ந்து அந்த நபர் மாணவர்களை தேடி அவர்களை நோக்கி சுட்டார். நான் அப்படியே கண்களை மூடிக் கொண்டு அசையாது படுத்திருந்தேன். இன்னொரு முறை சுடுவார் என்று காத்திருந்தேன்.

பிறகு அவர்கள் சென்றுவிட்டனர். நான் எழுந்திருக்க முயன்றேன் ஆனால் கீழே விழுந்தேன். அடுத்த அறைக்கு நகர்ந்தேதான் சென்றேன், அங்கு நான் கண்ட காட்சி பயங்கரம்! எங்கள் கல்வி நிறுவன அலுவலக ஊழியர் ஒருவர் உடல் எரிந்து கொண்டிருந்தது!

அவர் (பெண்) நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவரது உடலிலிருந்து ரத்தம் வந்தபடி இருந்தது. அப்போது அவர் உடல் எரிந்து கொண்டிருந்தது” என்று தனது பயங்கர அனுபவத்தை விவரித்த அந்த மாணவர் மயக்கமடைந்துள்ளார், கண் விழிக்கும் போது மருத்துவமனையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு பெரிய மாணவர்களை சுட உத்தரவு பிறப்பித்ததாகக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x