

பாகிஸ்தானின் கைபெர் மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்குப் மாகாணமான கைபெரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைபெர் பழங்குடியின பகுதியில், தீவிரவாதிகளின் மறைவிடம் என்று நம்பப்படும் பகுதியை இலக்கு வைத்து போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மோதல் நிறுத்தத்தை தாலிபான்கள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டன. ஆனால், முறிந்துபோன சாமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.