Published : 07 Dec 2014 08:57 AM
Last Updated : 07 Dec 2014 08:57 AM

கருப்பு பண மீட்பு விசாரணையில் இந்தியாவுக்கு உதவ தயார்: சுவிஸ் வங்கி முன்னாள் அதிகாரி வாக்குறுதி

கருப்பு பண விசாரணையில் இந்தி யாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ஸ்டீபானி ஜிபாட் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜெனீவா எச்.எஸ்.பி.சி. வங்கி முன்னாள் ஊழியர் ஹெர்வி பால்சி யானி, அந்த வங்கியில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 1,30,000 வாடிக்கையாளர்களின் பட்டியலை பிரான்ஸ் அரசிடம் 2008-ம் ஆண்டில் அளித்தார். அந்தப் பட்டியலை இந்தியாவுக்கு பிரான்ஸ் அரசு அளித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த கருப்பு பண முதலீட்டாளர்கள் பட்டியல் ஹெர்வி பால்சியானி அளித்த பட்டியல்தான்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான ‘யூனியன் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்தின்’ (யுபிஎஸ்) முன்னாள் ஊழியர் ஸ்டீபானி ஜிபாட் கருப்பு பண விசாரணையில் இந்தியா உதவ முன்வந்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் கொட்டப்பட்டுள்ளது. யுபிஎஸ் போன்ற பெரிய வங்கிகள் இந்திய முதலீட்டாளர்களை குறிவைத்து செயல்படுகின்றன.

தற்போது யுபிஎஸ் வங்கியின் நெட்வொர்க் மும்பையை மைய மாகக் கொண்டு செயல்படுகிறது. அவர்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஈர்ப்பார்கள், எங்கு, எப்படி வாடிக்கையாளர்களை சந்திப்பார் கள் என்பது குறித்து இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு விளக்க தயாராக உள்ளேன்.

உலகின் அனைத்து மூலை முடுக்கிலும் சுவிட்சர்லாந்து வங்கி யின் நெட்வொர்க் வியாபித்து பரவி யுள்ளது. நாடுகள், நகரங்கள் தோறும் அந்த வங்கிகளுக்கு தொடர்புகள் உள்ளன.

நான் யுபிஎஸ் வங்கியில் பணி யாற்றியபோது, பணக்காரர்களை கண்டறிந்து அவர்களை வங்கியில் முதலீடு செய்யவைப்பதுதான் எனக்கு அளிக்கப்பட்ட பிரதான பணி. 9 ஆண்டுகளாக அந்த வங்கியில் பணியாற்றினேன்.

2008-ம் ஆண்டில் மேலதிகாரி கள் எனது கணினியில் பதிவு செய் யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக் கான வாடிக்கையாளர்களின் ஆவணங்களை அழிக்குமாறு உத்தரவிட்டனர். அதற்கு நான் மறுத்தபோது என்னை பணிநீக்கம் செய்துவிட்டனர்.

தற்போது பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளின் கருப்பு பண விசாரணைக்கு உதவி வருகிறேன். மேலும் சில நாடுகளுக்கும் உதவி செய்து வருகிறேன். ஆனால் அந்த நாடுகளின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது.

இதேபோல் இந்தியாவின் கருப்பு பண மீட்பு விசாரணைக்கும் உதவ தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எச்எஸ்பிசி வங்கி வாடிக்கை யாளர் பட்டியலை வெளியிட்ட ஹெர்வி பால்சியானியும் இந்திய விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாக ஏற்கெனவே அறிவித் திருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x