

அமெரிக்க அதிபர் தேர்தல் 2016-ம் ஆண்டில் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போதைய ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரம் இப்போதே சூடு பிடித்துள்ளது.
அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உள்கட்சி தேர்தல் இரு கட்சிகளிலும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது ஜனநாயக கட்சியில் பராக் ஒபாமாவுக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பராக் ஒபாமா உள்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் தேர்தலிலும் வெற்றிவாகை சூடினார்.
தற்போது ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க ஹிலாரி கிளிண்டன் திட்டமிட்டுள்ளார். தனது விருப்பத்தை அவர் பலமுறை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட்டர் எலிசபெத் வாரனும் அதிபர் வேட்பாளர் போட்டியில் குதித்துள்ளார். கட்சி வட்டாரத்தில் ஹிலாரியைவிட எலிசபெத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே 2012 தேர்தலைப் போன்று இந்த முறையும் ஹிலாரிக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கைநழுவக்கூடும் என்று தெரிகிறது.