`பாக்சிங் நாள் உற்சாகம் கடைகளில் அலைமோதிய‌ மக்கள் கூட்டம்

`பாக்சிங் நாள் உற்சாகம் கடைகளில் அலைமோதிய‌ மக்கள் கூட்டம்
Updated on
1 min read

உலகெங்கும் நேற்று `பாக்சிங் நாள்' உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்து வரும் நாள் `பாக்சிங் நாள்' என கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கிக் கொண்டாடுவார்கள்.

அதையொட்டி, துணிக்கடைகள் உள்ளிட்ட பல கடைகளில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையும் களைகட்டும். எனவே, மக்கள் பலர் கடைகளுக்கு வந்து தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இந்ந நாளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கடைகளின் முன் அதிகாலை 2 மணி முதலே மக்கள் பலர் வரிசையில் நிற்கத் துவங்கிவிடுவார்கள்.

அப்படிப்பட்ட இந்த `பாக்சிங் நாள்' நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இங்கிலாந்தில் உள்ள‌ பல கடைகள் ஸ்மார்ட்போன்கள், டி.வி. முதல் துணிகள், காலணிகள் வரை அனைத்துப் பொருட்களுக்கும் 50 சதவீதம் மற்றும் அதற்கும் மேலாக சிறப்பு தள்ளுபடிகளை வழங்கி விற்பனையை கோலாகலமாகத் தொடங்கின‌.

கடும் குளிரையும் மழையையும் கூட பொருட்படுத்தாமல் மக்கள் அதிகாலை முதலே கடைகளின் முன் வரிசையில் நின்றிருந்தனர்.

கடைகளுக்கு வரும் மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, கடைகளில் வாங்கும் பொருட்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை சரிசெய்யவும் அல்லது அதற்கு ஈடாக இழப்பீடுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நாளில் இணையம் வழியாகப் பொருட்கள் வாங்குபவர்கள் மட்டும் சுமார் 748 பவுண்டுகள் அளவுக்கு (சுமார் ரூ.7405 கோடி) செலவு செய்வார்கள் என்றும் சில்லறை வணிக நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சுமார் 167 மில்லியன் (சுமார் 16 கோடி) வருகைகள் தரப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகமாகும் என்று இங்கிலாந்து இணைய சில்லறை வர்த்தக கூட்டமைப்பான `ஐ.எம்.ஆர்.ஜி' கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in