Last Updated : 26 Dec, 2014 12:09 PM

 

Published : 26 Dec 2014 12:09 PM
Last Updated : 26 Dec 2014 12:09 PM

ஐஎஸ் தீவிரவாதிகளால் விரட்டப்படும் சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தர வேண்டும்: கிறிஸ்துமஸ் பண்டிகையில் போப் அழைப்பு

வாடிகன் மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மையினரும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு நாம் அடைக்கலம் தந்து கருணையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கிறிஸ்துமஸ் உரையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிகா தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமென்று போப் அழைப்பு விடுத்துப் பேசினார்.

நமக்கு அருகில் உள்ளவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களிடம் கருணை காட்டி உதவ நாம் எந்த அளவுக்கு பெரிய மனதுடன் தயாராக இருக்கிறோம் என்பதை இந்த நாளில் யோசிக்க வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு காட்டுவதும், ஒருவரிடம் மற்றொருவர் கருணையுடன் நடந்து கொள்வதுதான் இப்போது இந்த உலகுக்கு தேவைப்படுகிறது என்று போப் பேசினார்.

சிரியா உள்நாட்டுப் போர், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை, எபோலா வைரஸால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு உதவுவது போன்றவை போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் உரையில் இடம் பெற்றிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x