Published : 14 Jul 2019 06:14 PM
Last Updated : 14 Jul 2019 06:14 PM

கிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று (ஞாயிறு, 14-7-19) ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று பதிவான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.  மாலுகு தீவுகளில் இந்த நிலநடுக்கம் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து தீவின் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளுக்கு வந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரம் 6.28-ன் படி வடக்கு மாலுகு தீவுகளில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது.

 

இது தொடர்பாக, “இந்த பூகம்பம் வலுவாக இருந்ததால் பீதியடைந்த மக்கள் தெருக்களுக்கு வந்து விட்டனர், இப்போது கூட அச்சத்தில் சாலையில்தான் இருக்கின்றனர்” என்று உள்ளூர் அதிகாரி மன்சூர் தெரிவித்தார்.

 

அதிகாரிகள் சூழ்நிலையை அவதானித்து வருகின்றனர், ஆனால் இதுவரை பலியோ, சேத விவரமோ தெரியவரவில்லை. நிலநடுக்க மையத்தின் அருகில் இருக்கும் லபுஹா என்ற ஊரில் பதற்றமடைந்தவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் உயரமான இடம் தேடிச் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பல இடங்களில் தாக்கம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த வாரத்தில் இதே இடத்தில் 6.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x