Published : 13 Jul 2019 10:39 AM
Last Updated : 13 Jul 2019 10:39 AM

உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக இந்தியாவின் அன்சுலா காந்த் நியமனம்

உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த பிரபல வங்கித்துறை நிபுணரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரியுமான அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல் பெண் இவர் ஆவார்.

உலக நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கி வருகிறது. இரண்டாவது உலகப்போர் முடிவடையும்போது தொடங்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர். உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இந்த வங்கியின் மூத்த நிர்வாகிகளாக பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகின்றனர்.  

இந்தநிலையில் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அலுவலராக அன்சுலா காந்த் நியமிக்கப்பட்டிருப்பதாக, உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல் பெண் இவர் ஆவார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘வங்கித் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த அன்சுலா காந்த், பாரத ஸ்டேட் வங்கிக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் மூலம் கிடைத்த அனுபவம் தற்போது உலக வங்கிக்கு வலிமை சேர்க்கும்’’ எனக கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் பிறந்த அன்சுலா காந்த், டெல்லி லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். 1983ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியைத் தொடங்கிய அவர், தலைமைப் பொது மேலாளர், துணை நிர்வாக இயக்குநர், தேசிய பங்குச் சந்தை பங்குதாரர் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x